திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கலைப்போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு!
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப்பணித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிகொணர்தலுக்காகவும், மாணவர்களுக்கிடையே நல்லுறவைப் பேணி பாதுகாக்கவும் “கெதார்சிஸ் 2022” என்ற பெயரில் தேசிய அளவிலான சமூகப்பணித்துறை மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற்றது. இதில் பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் D.பால் தயாபரன் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியின் முன்னாள் சமூகப் பணித்துறை மாணவரும்,

தேசிய அகாடமி RUDSEIT-ன் (தமிழ்நாடு) மதிப்பீடு மற்றும் சான்றிதழின் உதவிக் கட்டுப்பாட்டாளருமான முனைவர் J.ஜோஷப் ஆனந்த ராஜ் ஆகியோர் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தனர். ஆடல், பாடல், வினாடி வினா, ஓவியம், கவிதைப்போட்டி, முகங்களில் வண்ணம் தீட்டுதல் என 13 வகையாக நடைபெற்ற இந்த கலைப்போட்டியில் பல்வேறுபட்ட துறைகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் கலைப்புல முதன்மையரும், இணைப்பேராசிரியர் மற்றும் ஆங்கிலத்துறையின் தலைவரான முனைவர் S.ஷோபனா மற்றும்
கல்லூரி சமூகப் பணித்துறையின் முன்னாள் மாணவரும், VIVERO இன்டர்நேஷனல், ஹைதராபாத் நிறுவனத்தின் ஆரம்ப குழந்தை பருவத்தின் கல்வியாளருமான ராஜலட்சுமி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களுடன் கேடயம் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கினர். இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பங்கேற்ப்பு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் 17 கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட 339 கலந்து கொண்டனர்.