மணல் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் திருச்சி விமான நிலையத்தில் கைது!

0 400
Stalin trichy visit

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூரு போன்ற நக ரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.

அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரே சன் மற்றும் உடமைகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இமிகிரேசன் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவரின் பாஸ் போர்ட்டை ஆய்வு செய்தபோது போலீசாரால் தேடப்படும் குற்றவாளியென அறிவிக்கப்பட்டு எல்ஓசி வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை யடுத்து அவரை பிடித்து ஏர்போர்ட் போலீசில் இமிகிரேசன் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ராமநாத புரம் மாவட்டம் சின்ன ரெகுநாதபுரத்தை சேர்ந்த சீனி மகன் நாகராஜ் (வயது 30) என்பதும், இவர் மீது திருப்புலாணி காவல் நிலையத்தில் மணல் கடத்தல் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராகா மல் தலைமறைவானதும் தெரியவந்தது. இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் திருப்புலாணி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் திருச்சி வந்து நாகராஜை கைது செய்து அழைத்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.