அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு: அமைச்சர் கே. என் நேரு பங்கேற்றார்
திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயிலில் இன்று (6.7.22) நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாவில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்
திரு.கே. என் நேரு அவர்கள் பங்கேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ. ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.இராஜேந்திரன், மாவட்டப் பிரமுகர் க. வைரமணி, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சு. ஞானசேகரன் மற்றும் கோட்டத் தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
