திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற தடகள போட்டிகள்
திருச்சி மாவட்ட தடகள சங்கம், ஸ்டேட் பேங்க் (லேட்) S. மோகன் நினைவு சுழற்கோப்பை 2024
இணைந்து வழங்குபவர்கள் நியூரோ ஒன் & பனானா லீப் & அற்புத பவன் , 09/08/2024, 10.08.24 இரண்டு நாட்கள் மாவட்ட தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் மாவட்ட தடகள சங்க செயலாளர் டி..ராஜு தலைமையில் நடந்தது.
திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ச. ரவிசங்கர் வரவேற்றார். திருச்சி மாவட்ட தடகள சங்க துணை செயலாளர்கள் எம்.கனகராஜ், எம்.சுந்தரேசன், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாபு, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பனானா லீப் நிறுவனர் ஆர்.மனோகரன் பரிசு, சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கினார். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 2,வது இடம் கோல்டன் ஸ்போர்ட்ஸ் கிளப்.
பெண்கள் பிரிவில் ஓட்டு மொத்த சாம்பியன் முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், 2வது இடம் திருச்சி பாந்தர் ஸ்போர்ட்ஸ் அகாடமி (PANTHER SPORTS ACADE ) ஆகிய அணிகள்
கோப்பை பெற்றார்கள் . இப்போட்டியில் ரவிந்தன், மனோகரன், கண்ணன், மதி, லாசர், ஹரிஹர ராமச்சந்திரன், 2000 மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள் .
முடிவில் தடகள சங்க நிர்வாகி துரை வெங்கடேசன் நன்றி கூறினார்.