காட்டுப்புத்தூர் பகுதியில் கிணற்றில் இறந்த நிலையில் சிசு மீட்பு

0 286
Stalin trichy visit

திருச்சி, ஆக.12  திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் கிடந்த சிசு (பச்சிளம் குழந்தை) சடலத்தை காட்டுப்புத்தூர் போலீசார் மீட்டு விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

காட்டுப்புத்தூர் அருகிலுள்ள மேய்க்கல்நாயக்கன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள ஒரு கிணற்றில் உள்ள தண்ணீரில் சிசு (பச்சிளம் குழந்தை) மிதந்து கொண்டிருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து காட்டுப்புத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்து கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து பிறந்த பெண் குழந்தையை தொப்புள் கொடியுடன் கிணற்றில் வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என காட்டுப்புத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.