மணப்பாறையில் சிறுமியை கடத்த முயற்சி…

0 878
Stalin trichy visit

மணப்பாறையில் வீட்டில் இருந்த 12 வயது சிறுமியை கடத்த முயற்சி
கூச்சலிட்டதால் விட்டு விட்டு தப்பியோடிய மர்ம நபர்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள அண்ணா நகரில் 12 வயது சிறுமி 7 ம் வகுப்பு படித்து வரும் நிலையில் இன்று காலை வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் திடீரென வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பிடித்து தூக்கிச் சென்று கடத்த முயன்றார். உடனே அந்த சிறுமி கூச்சலிடவே குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதையறிந்த மர்ம நபர் சிறுமியை விட்டு விட்டு தான் வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார்? சிறுமியை ஏன் கடத்த முயன்றார் என்பது தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் ஏதும் பதிவாகி உள்ளதா? என்பதை பார்த்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.