திடீரென மாயமான விவசாயி….
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாழையூரில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த விவசாயி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். காவல் நிலையத்தில் புகார். தேடும் பணிகள் தீவிரம்.
மண்ணச்சநல்லூர் அருகே வாழையூர் ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் 52 வயதான காமேஸ்வரன். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். அவர் செய்து வந்த விவசாய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காமேஸ்வரன் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காமேஸ்வரன் வீட்டில் இருந்த வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர்களது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் அக்கம்பக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் காமேஸ்வரன் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது மனைவி ரேணுகா சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து மாயமான காமேஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.