மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி No.1 டோல்கேட்டில் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் முன்னாள் அமைச்சர்கள் S.வளர்மதி, T.Pபூனாட்சி, கு.ப.கிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் M.செல்வராசு, பரமேஸ்வரி முருகன், இந்திரா காந்தி, மாநில எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் T.சின்னையன், மாவட்ட பொருளாளர் M.சேவியர், ஒன்றிய செயலாளர்கள் V.ஆதாளி, T.ஜெயக்குமார், T.ஜெயராமன், M.ராஜமாணிக்கம், முத்துக்கருப்பன், S.ஜெயக்குமார், செல்வராஜ், மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் துரைசக்திவேல், திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், மாவட்ட அணி செயலாளர்கள் T.அறிவழகன், அய்யம்பாளையம் ரமேஷ், புல்லட் ஜான், கண்ணன் மார்க்கெட் ராஜா, ஸ்ரீரங்கம் S.V.R ரவிசங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் S.திருப்புகழ், ரிதம் G.செந்தில்குமார் மற்றும் ஊராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, ஒன்றிய, பகுதி, வார்டு பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.