சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி அரியமங்கலம் பகுதி லட்சுமி மழலையர் பள்ளி,திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி, போதாவூர் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வில் இதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு பேருந்து கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதில் விபத்துகளைத் தவிர்க்கும் விழிப்புணர்வு வாசகங்களும்,புகைப்படங்களும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
மேலும், சிக்னல் சொல்லும் வழிகாட்டுதல்கள், கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்டவை குறும்படமாக காண்பிக்கப்பட்டது.

இதை ஒரே நாளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பார்வையிட்டு
சாலை விதிகளைக் கடைப்பிடிக்க உறுதியேற்றனர்.
அதேபோல இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து இருவர் மட்டுமே செல்ல வேண்டும். கார்களில் செல்வோர் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது. சாலையைக் கடக்கும் போது இருபுறமும் பார்க்க வேண்டும். போக்குவரத்து சிக் னல்களின் உத்தரவுகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவியருக்கு போக்குவரத்து அதிகாரிகள் விளக்கினர்.
நிகழ்வில் போக்குவரத்துக்கழக திருச்சி துணை மேலாளர்கள் சதீஷ்குமார் (வணி கம்), சாமிநாதன் (தொழில்நுட்பம், பயிற்சி), உதவிப் பொறியாளர்கள் ஹரித், செல்வம், ஓட்டுநர் ரமேஷ், ரஹ்மத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.