சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச விழா 8ம் நாள்

0 484
Stalin trichy visit

 

திருச்சி, பிப்.3: தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிர சித்தி பெற்ற தலமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் திகழ்கிறது. இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லா மல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இக்கோ யிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு கோயில் கடந்த 26ம் தேதி உள் பிரகாரத் தில் உள்ள தங்க கொடிமரத்திற்கு சிவாச்சாரியர் களை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் உற் சவர் அம்பாள் 11 நாட்கள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து திருவீதி உலா நடைபெறுகிறது. 8ம் திருநாளான நேற்று உற்சவர் அம்மன் தங்கபதக் கம், காசி மாலை, வெள்ளிக் கவசம் அணிந்து வெள்ளி குதிரை வாகனத்தில் அம் மன் எழுந்தருளினார். பின் னர் மகா தீபாரதனைக்கு பின்பு கடைவீதி மற்றும் தேரடி வீதி வழியாக சமய புரம் கோவிலை அம்மன் புறப்பாடு சென்றடைந்தது. வழிநெடுக ஆயிரக்கணக் கான பக்தர்கள் சாமி தரிச னம் செய்தனர். விழா ஏற் பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலை மையில் அறநிலையத்துறைஅலுவலர்கள், கோயில்அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.