துடையூர் கிராமத்தில் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு
இன்று 03.02.2023 திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் துடையூர் கிராமத்தில் 2022 – 23 தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு நடைபெற்றது.
இதில் வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா வரவேற்பு உரை ஆற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் பானு முருகேசன் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினர். வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயராணி மண்வளம் குறித்தும், மண்வள பாதுகாப்பின் அவசியம் குறித்தும், விதை தேர்வு, விதை தேர்வின் போது கவனிக்க வேண்டியவைகள் குறித்தும் உரையாற்றினார்.
முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட 26 விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்தப் பகுதி வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.