நாகமங்கலத்தில் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

0 323
Stalin trichy visit

திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன்,. குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், திருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் இணைந்து மணிகண்டம் வட்டாரம், நாகமங்கலம் ஊராட்சி, 2வது வார்டு காந்திநகர் கிராமத்தில் குழந்தைகளை வைத்து யாசகம் எடுப்பதை தடுப்பது மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நாகமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கணேசன் தலைமையில் 20.07.2022 நடைப்பெற்றது.
நாகமங்கலம் ஊராட்சி மன்ற 2வது வார்டு உறுப்பினர் மூக்காயி, அங்கன்வாடி பணியாளர் ரெஜினா மேரி,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை நலக் குழு உறுப்பினர்கள் பிரபு குழந்தைகளை வைத்து யாசகம் எடுப்பதை தடுப்பது , குழந்தைகளை வைத்து யாசகம் எடுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் மற்றும் இளைஞர் நீதி சட்டம் குறித்து பேசினார். உறுப்பினர் நேத்தலிக் கல்வியின் அவசியம் பாதுகாப்பு, பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகருக்கு செய்யும் பணிகள் குறித்தும்,மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் பரமேஸ்வரி குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை, சட்ட விரேதா குழந்தை தத்து எடுத்தல் குறித்தும்,
குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவராஜ்,திருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் ராஜகுமாரி ஆகியோர் பெண்கள், குழந்தை கடத்தல் , குழந்தை நல காவல் அலுவலரின் பணிகள் குறித்தும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் லட்சுமி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சைல்டு லைன் செயல்பாடுகள்,குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு, குழந்தைகளுக்கு குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலையில் குழந்தைகளை வைத்து யாசகம் எடுப்பதை தடுப்பது குறித்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.


புறத்தொடர்பு பணியாளர் கிருத்திகா,மணிகண்டம் காவல் நிலைய காவலர் பாலாஜி ஆகியோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.