நெகிழியால் ஏற்படும் மாசு குறித்த விழிப்புணர் பேரணி

0 360
Stalin trichy visit

 

ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியால் விளையும் சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிஹெச்இஎல் சார்பில் திருச்சியில் இருசக்கர வாகன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. ஒற்றைப் பயன்பாட்டு நெகிழி மாசு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஏந்திய பதாகைகளுடன் ஊரகக் காவல் படையினர், போக்குவரத்து ஒருங்கிணைப்பாளர்கள், பாதுகாப்புப் முகவர்கள், பிஹெச்இஎல் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

 

சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியை, பிஹெச்இஎல்லின் கைலாசபுரம் ஊரகத்தில் உள்ள மனமகிழ் மன்றத்திலிருந்து பற்றிணைப்பு ஆராய்ச்சிக் கழகம், ஆய்வகங்கள் மற்றும் புதிய வளர்ச்சிப் பகுதிகள் துறைக்கான பொது மேலாளர் எஸ்.கௌரிசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய கௌரிசங்கர், பேரணியில் பங்கேற்றவர்கள் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியால் சுற்றுச்சூழலுக்கு விளையும் தீங்குகளை அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் விளக்கிடக் கேட்டுக்கொண்டார். சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் பொது மேலாளர் திருமாவளவன் கூட்டத்தை வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.