மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை : விழிப்புணர்வு பேரணி

0 367
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பகுதியில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை விதித்து விழிப்புணர்வு பேரணி உறுதி மொழியில் மாணவிகள் பங்கேற்பு.

லால்குடி நகராட்சி பகுதியில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அகற்றுவதற்கு தடை விதித்து நகராட்சி பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி தொடக்க விழாபெண்கள் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நடைபெற்றது. விழிப்புணர்வு குறித்து நகராட்சி ஆணையர் குமார், பள்ளி தலைமை ஆசிரியை நளினா, நகர்மன்ற உறுப்பினர்கள் செத்தில் மணி, ஆறுமுகம், ராதிகா, விஜயலெட்சுமி ராஜேந்திரன், துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேசினர்.
நகர்மன்றதலைவர் துரை மாணிக்கம் பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணி ரவுண்டா பகுதி சுற்றிலும் மாணவிகள், நகராட்சி அலுவலர்கள் , பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் நின்று விழிப்புணர்வு குறித்து கோசமிட்டனர். கழிவு நீர் அகற்ற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசிய எண் 144 20 பதாகைகளுடன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி உறுதி மொழி எடுத்தனர்.
இதனை தொடர்ந்து ..

லால்குடி நகராட்சி ஆணையர் குமார் கூறுகையில் லால்குடி நகராட்சி பகுதியில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிட உறுதி மொழி ஏற்போம்.மனிதர்களை கொண்டு கைகளால் மனித கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி கழிவு களை அகற்றும் பணியில் ஈடுபடுவோர் சட்டத்தை மீறப்படும் குற்றங்களுக்கு ஜாமினில் வர அனுமதி கிடையாது. மேலும் ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம், எனவே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய தாணியங்கி கழிவு நீர் அகற்றும் வாகனத்தை பயன்படுத்த முன்வர வேண்டும் நகராட்சி மற்றும் மோட்டார் வாகன அலுவலகத்தில் பதிவு பெற்ற கழிவு நீர் வாகனத்தையே பயன்படுத்த வேண்டும். கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் மூலமாக கழிவுகளை அகற்ற கட்டணமில்லா தொலைபேசி எண் 144 20 தொடர்பு கொண்டு பயன் பெறலாம் நகராட்சி ஆணையர் குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.