உர விற்பனையாளர்களுக்கு ரபி பருவ புத்தாக்க கூட்டம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லால்குடி மற்றும் புள்ளம்பாடி பகுதியில் உர விற்பனையாளர்களுக்கான ரபி பருவ புத்தக கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் லால்குடி புள்ளம்பாடி பகுதிகளைச் சேர்ந்த உர விற்பனையாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயலாளர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திருச்சி தரகட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர், லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர், புள்ளம்பாடி வேளாண்மை உதவி இயக்குனர், புள்ளம்பாடி வேளாண்மை அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் உர கட்டுப்பாட்டு ஆணை எப்.சி.ஓ 1985 இல் கூறப்பட்டுள்ள விதிகளின்படி உர இருப்பு புத்தக பராமரிப்பு, விற்பனை முனைய கருவி மூலமாக உர விற்பனைக்கான பட்டியலிடுவது, உர இருப்புகள் பராமரிப்பு, விவசாயிகளிடம் விற்பனை ரசீது மூலமாக வழங்குதல் பற்றி விளக்கி கூறப்பட்டது. மேலும் உர மேலாண்மை மற்றும் பூச்சி மருந்து விற்பனையில் ஒவ்வொரு பயிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் இன கவர்ச்சி பொறி மூலம் பூச்சிகளின் எண்ணிக்கை அறிந்து அதற்கு ஏற்றார் போல் பூச்சி மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என இக்கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.