ஆடி18யை முன்னிட்டு காந்தி மார்க்கெட்டில் குவிந்த வாழைத்தார்கள்

0 179
Stalin trichy visit

திருச்சிஆக2  நாளை ஆடி 18 திருவிழா கொண்டாடப்படுவது முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார்கள் அதிக அளவு குவிந்துள்ளது.
இன்றைக்கு விசேஷ காலங்களில் வாழைப்பழங்கள் கண்டிப்பாக இடம் பெறுகின்றனர். அந்த வகையில் முகூர்த்த நாள் மற்றும் திருவிழா நாட்களில் வாழைப்பழங்களின் விலை அதிகரிப்பது வாடிக்கையாக்கி வருகிறது. அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டியில் கடந்த சில நாட்களாக வாழைத்தார்களின் வரத்து அதிக அளவு காணப்படுகிறது.

பொதுவாக திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை, தேனி, கம்பம் போன்ற ஊர்களில் இருந்து வாழைத்தார்கள் வந்துவாழைக்காய் மண்டியில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் வாழைத்தார்கள் வருவது வழக்கம். ஆனால் நாளை ஆடி 18யை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக 15 ஆயிரம் வாழைத்தார்கள் வந்த வண்ணம் உள்ளது.

வாழைப்பழங்களில் செவ்வாழை, பூவன், ரஸ்தாலி, கற்பூரம், ஏலரசி, நேந்தரன், பச்சை லாடன், ஜின்னை பச்சை பழம், மொந்தன் காய் உள்ளது.தற்பொழுது செவ்வாழைத்தார் ரூபாய் 300 முதல் 1000க்கு விற்கப்படுகிறது கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாய் 250 முதல் 850 வரை விற்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற பூவன் பழம் தார் இன்றைக்கு 200 முதல் 700 வரை விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 150 முதல் 650 வரை விற்கப்பட்டு வந்தது.
இது குறித்து திருச்சி வாழைக்காய் – கனி வியாபாரிகள் சங்க தலைவர்
கே பி பழனிவேல் பிள்ளை கூறும் பொழுது பொதுவாக ஆடி மாதத்தில் வாழைத்தார்
வரத்து குறைவாக இருந்தது. ஆனால் தற்சமயம் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வாழைத்தார் வரத்து பழக்கத்திற்கு மாறாக அதிகரித்து உள்ளது.குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட பகுதியிலிருந்து வாழைத்தார்கள் வரும். ஆனால் இந்த முறை கடலூர், சத்தியமங்கலம் சின்னமனூர் ஆகிய பகுதியிலிருந்து அதிகளவு வாழைதார்கள் வரத்து வந்துள்ளது இந்த அதிக வரத்தால் வாழைத்தாரின் விலை சற்று உயர்த்திருந்தாலும் இந்த விலை ஏற்றம் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு பாதகம் இல்லாமல் உள்ளது என்று கூறினார்.

பூக்கள்  விலை உயர்வு :

இதேபோன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட் பூக்களில் விலையும் உயர்ந்துள்ளது. செவ்வந்தி கிலோ ரூ300 முதல் ரூ 320,அரளி ரூ300,விச்சி ரூ150 மல்லிகை ரூ500 கனகாமரம் ரூ 1,000, முல்லை ரூ 600, ஜாதி பூ ரூ800, சம்மங்கி ரூ300 பன்னீர் ரோசா பூ ரூ120 க்கு விற்கப்படுகிறது.
இதேபோன்று கொய்யாப்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளம்,எலுமிச்சை, வாழை பழங்கள் போன்றவை வழக்கதற்கு மாறாக கூடுதலாக விற்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.