மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி ஆக 2- திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45) இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் ஏற்கனவே சண்முகம் இறந்து விட்டதாக கூறினார்.
இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.