திருச்சி மெயில் செய்தி எதிரொலி திருவாணைக்கோவில் கல்லணை சாலையில் பேரிகார்டு அமைப்பு
திருவாணைக்கோவில் கல்லணை சாலையில் பேரிகார்டு இல்லாத காரணத்தால் விபத்துகள் ஏற்படுகிறது. இதையடுத்து திருவாணைக்கோவில் கல்லணை சாலையில் பேரிகார்டு அமைக்கக் கோரி இன்று காலை கிராமமக்கள் மறியிலில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருச்சி மெயிலில் செய்தி வெளியானது. இந்நிலையில் அப்பகுதியில் உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு பேர்கார்டு அமைத்துக் கொடுத்தார். இச்செய்தியினை வெளியிட்டதற்காக பனையபுரம் கிராம மக்கள் திருச்சி மெயில் செய்திக்கு நன்றி தெரிவித்தனர்.