தேனீக்கள் கடித்து 30 பேர் காயம்
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர் கிராமம் ஏரிக்கரை கோங்குடியான் கோயில் அருகே 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் இருந்த தேன் கூட்டை குரங்கு ஒன்று ஆட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பரந்துவந்த தேனீக்கள் நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களை கடித்ததில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காயமடைந்தனர்.
கை, கால், முகம் ஆகிய இடங்களில் தேனீக்கள் கொட்டியதால் அந்த இடங்களில் வீக்கம் ஏற்பட்டு காயத்துடன் 30க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.