வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.395 இலட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்திற்கான அடிக்கலை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதரணி, ஒன்றியக்குழுத் தலைவர் குணசீலன், துணைத்தலைவர் ஸ்ரீவித்யா ரமேஷ்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.