பைக் மரத்தில் மோதி வாலிபர் பலி!

0 566
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே காளிப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன்கள் சக்திவேல்(வயது 23), சதீஷ் (20), உறவினர் பெருமாள் மகன் சந்துரு(23). இவர்கள் 3 பேரும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரிசி ஆலையில் வேலை செய்து வந்தனர். கடந்த 26ம் தேதி இரவு ஷிப்ட் பணிக்காக 3 பேரும் ஒரே டூவீலரில்

 

காளிப்பட்டியில் இருந்து புறப்பட்டனர். காளிப்பட்டி அருகே ஜீவாநகர் பகுதியில் சென்றபோது சாலையோரம் உள்ள புளிய மரத்தில் டூவீலர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் வழியிலேயே சக்திவேல் இறந்தார். சதீஷ், சந்துரு ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.