போதைப் பொருட்களுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணி

0 251
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறையின் சார்பில், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில், திருச்சிராப்பள்ளி எம்.ஜி.ஆர் ரவுண்டானா கோர்ட்டு சாலை அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன்,., வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோர் இன்று (16.8.22) கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். போதைப் பொருட்களுக்கு எதிரான பதாகைகள் பொருத்திய இந்த மோட்டார் சைக்கிள் பேரணியானது ஐயப்பன் கோவில் வழியாக செயின்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி, மத்திய பேருந்து நிலையம், காமராஜர் சிலை ராக்கின்ஸ் சாலை, ரயில்வே சந்திப்பு ரவுண்டானா, தலைமை அஞ்சல் நிலைய ரவுண்டானா, டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டரங்கம் சென்றடைந்தது. காவலர்களின் பாண்டு வாத்திய இசையுடனும் நாண்கு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வுப் பதாகைகள் பொருத்திய நான்கு சக்கர வாகனங்களும் இந்த அணிவகுப்பில் பஙகேற்றன.

இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள் அன்பு, சுரேஷ்குமார், உதவி ஆணையர்கள் அஜய்தங்ஙம்,செந்தில்குமார், திரு.ராஜு, பாலசுப்பிரமணியன் , வருவாய் கோட்டாட்சியர்  கோ.தவச்செல்வம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.