திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தேவாங்க நகரில் வசித்து வருபவர் முருகேசன்(வயது 60). இவர் சலவை தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாமல் இருந்ததை அறிந்த மர்ம நபர்கள் முருகேசனின் வீட்டில் புகுந்து வீட்டிலிருந்த ரூ.12000 மற்றும் 2 பவுன் ஒரு பவுன் மோதிரம் மற்றும் தாலி காசு ஆகியவற்றை திருடி சென்றார்கள்.
இதேபோன்று இவரது வீட்டின் அருகாமையில் உள்ள கோகிலா (வயது 33) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம்போல் பள்ளிக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் தாலி காசு திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோகிலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.