திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திருவெறும்பூர் பகுதி மற்றும் அரியமங்கலம் பகுதியில் உள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்று கொண்டிருக்கும் வாக்காளர் சேர்ப்பு முகாமில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கழகத்தின் சார்பில் நியமிக்கபட்டுள்ள வாக்குசாவடி முகவர்களிடம் கேட்டறிந்தார்கள். உடன் பகுதி கழக செயலாளர்கள் S.பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், A.தண்டபாணி மற்றும் வட்ட கழக செயலாளர் R.P.கணேசன், அன்புதுரை, மாரிமுத்து, விஸ்வநாதன் மற்றும் கழக முன்னோடிகள் A.ஆறுமுகம், சுவீட் வெங்கடேசன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.