காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் பிணம்

0 424
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே காவிரி ஆற்றின் கரையோரம் தங்கையன் கோவில் பின்புறம் சம்பவத்தன்று ஆண் பிரேதம் ஒன்று கிடப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க இறந்து கிடந்த நபரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதனால் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற போது அவர் தண்ணீரில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து இறந்து கிடந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்து அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.