ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் : நல வாரிய தலைவர் பொன்குமார் பேட்டி
திருச்சியில் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நல வாரியங்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைந்து சென்றடைந்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்களையும் நலத்திட்ட உதவிகளை வழங்கக்கூடிய நிகழ்வுகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்,
அந்த அடிப்படையில் இன்று திருச்சி மாவட்ட வாரிய அலுவலகத்தில் ஆய்வு செய்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்களின் குறைகளை கேட்டு அறிந்து அது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது,
கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இல்லாமல் இருந்தால் அவர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு 4லட்சம் ரூபாய் இலவசமாக வழங்கக்கூடிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, இதற்கு நலவாரியத்தில் பதிவு பெற்று இருக்க வேண்டும், 3 ஆண்டு கால உறுப்பினராக இருக்க வேண்டும், 300 சதுர அடி இடம் இருந்தால் 4 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்..
இந்த திட்டத்தை 4 கோடியில் ஆண்டுக்கு 10,000 தொழிலாளர்களுக்கு வீடு கட்டக்கூடிய அளவுக்கான பெரும் நோக்கத்தோடு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தை வருகிற 15ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதற்கட்டமாக 104 தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டத்திற்கான ஆணைகளை வழங்கி முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு மாவட்ட வாரியாக விண்ணப்பித்து இருக்கக்கூடிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வீடு கட்டுவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
3 ஆண்டு காலத்திற்குள் ஏறத்தாழ 50 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த அரசால் சொந்த வீட்டிற்கு ஆளாகி இருப்பார்கள் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக இந்த திட்டம் உள்ளது.
திருச்சியில் 412 பேர் உறுப்பினராக உள்ளனர் அவர்கள் வீடு கட்டுவதற்காக உதவி கேட்டு விண்ணப்பித்து உள்ளார்கள் அந்த விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையிலான குழு பரிசளித்து அதனை பரிந்துரை செய்யும் பொழுது அதை எங்கள் வாரியம் அதற்கு இறுதி ஒப்புதல் வழங்க உள்ளது.
மேலும் இந்த ஆட்சிக்கு உலக அளவில் பாராட்டு கிடைத்தாலும் ஒன்றிய அரசும் அவரால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநரும் முட்டுக்கட்டை போடக்கூடிய மோசமான நிலை இருக்கிறது, ஆளுநர் அரசியல் பேசக்கூடிய நிலைக்கு இறங்கி வந்திருக்கிறார் அரசியல் சாசன முறைப்படி பதவி ஏற்றுக்கொண்ட கொண்ட ஒருவர் ஜாதி மத பேதங்கள் கடந்து ஜனநாயக மாண்பை காக்க வேண்டிய ஆளுநர் பாரதிய ஜனதா கொள்கை பரப்பு செயலாளர் போல் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது இது வன்மையான கண்டனத்திற்குரியது, ஆளுநர் அவர் பதவியை
ராஜினாமா செய்துவிட்டு அந்த வேலையை அவர் பிஜேபில் செய்யலாம்,
அரசியல் மரபை ஆளுநர் மீறிய காரணத்தினால் ஒன்றிய மோடி அரசு அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்,
தமிழ்நாடு சட்டப்பேரவை அனைத்துக் கட்சி ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் இன்று வரை ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் மாளிகையில் தூங்கிக் கொண்டு இருக்கிறது இதெல்லாம் பார்க்க நேரமில்லாத ஆளுநர் அரசியல் பேசுவது மதத்தை பற்றி பேசுவது மொழி பிரச்சாரம் செய்வது, சமஸ்கிருதங்களின் பெருமைகளை பேசுவது, இதெல்லாம் அழகல்ல அரசியல் சாசன மரபை மீறிய காரணத்தினால் அவர் இந்த பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்..
பேட்டி. பொன் குமார்
(தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர்)