முசிறி அருகே அய்யம்பாளையம் முருகன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சசிகலா(49). இவர் சம்பவத்தன்று முசிறி அருகே வெள்ளூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டிலிருந்த பீரோவை மர்ம நபர்கள் உடைத்து 2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடனே முசிறி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.