வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

0 284
Stalin trichy visit

சமயபுரம் அருகே உள்ள மேலவாளாடி மழவராய சத்திரத்தை சேர்ந்தவர் முத்தையா(வயது56). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி(50). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று காலை முத்தையா மற்றும் அவரது 2 மகள்களும் வேலைக்கு சென்று விட்டனர். மகன் பள்ளிக்கு சென்றிருந்தார். செல்வி அப்பகுதியில் நடக்கும் நூறு நாள் வேலைத்திட்ட பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2½ பவுன் சங்கிலி, ½ பவுன் தோடு மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சமயபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.