“கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி” சாம்பியன் பட்டம் வென்றது யார்?

0 351
Stalin trichy visit

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி லீக் முறையில் திருச்சி தேசிய மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி மைதானங்களில் நடைபெற்றது. கால் இறுதி போட்டிகளில் திருச்சி மண்டலத்தில் வென்ற பிஷப் ஹீபர், தேசிய மற்றும் தஞ்சை மண்டலத்தில் வென்ற மயிலாடுதுறை ஏ.வி.சி., மன்னர் சரபோஜி அரசு ஆகிய 4 கல்லூரி அணிகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கிரிக்கெட் சாம்பியன் பட்டத்திற்கான அரையிறுதி லீக் போட்டிகளில் விளையாடின. 4 கல்லூரி அணிகள் பங்கேற்ற அரையிறுதி போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மூன்று

போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்றது. தேசிய கல்லூரி இரண்டு போட்டிகளில் வென்று இரண்டாவது இடத்தையும்,ஒரு போட்டியில் வென்ற தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மூன்றாவது இடத்தையும், நான்கவது இடத்தை மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியும் பிடித்தன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வீரர்களை முதல்வர் டி. பால் தயாபரன், உடற்கல்வி இயக்குனர் ஏ.பால்ராஜ், கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் ஆர்.வீரராகவன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.