திருச்சி மாவட்டம், திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது தங்கை
விஜயலட்சுமி. இவருக்கும், சென்ட்ரிங் வேலை செய்யும் சிவக்குமார் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சிவகுமாரின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து சந்துருவின் மனைவியான சத்யாவும், அண்ணன் முறையான சிவகுமாரும் ஒன்றாக வசித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு,

தன்னுடைய மனைவியை தன்னிடமிருந்து பிரித்து விட்டாயே உன்னை கொல்லாமல்
விடமாட்டோன் என கூறி ஆத்திரத்தில் அரிவாளை கையில் வைத்துக்கொண்டு
சிவக்குமாரை வெட்ட துரத்தினார். இதில் சிவக்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதைபார்த்த அப்பகுதி மக்கள் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில்
பதிவேற்றி விட்டனர். இதனை பார்த்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து
சென்று 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு
செய்தனர். இதில் காயம் அடைந்த சிவக்குமர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்துரு மீது ஏற்கனவே கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக வீடியோவை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்….(https://fb.watch/cy04Y_qdr6/)