புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி; அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைத்தார்!
திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அவரது தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பாப்பாகுறிச்சி பகுதிக்கு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய நகர பேருந்து வழித்தடத்தில் சத்திரம் பேருந்து நிலையம் முதல் பாப்பாகுறிச்சி வழி அரியமங்கலம் காட்டூர் வரை தினசரி 4 நடைகள் இயக்கப்படும் புதிய பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனை

கார்ட்டூர் பெரியார் சிலை அருகில் பாப்பா குறிச்சி பகுதிக்கு புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, திருச்சி மாநகர துணை மேயர் திவ்யா, கோட்டத்தலைவர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், பகுதி செயலாளர் நீலமேகம், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.