குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு; காப்பாற்ற முயன்ற கணவரும் காயம்!

0 310
Stalin trichy visit

திருச்சி காந்திமார்கெட் அருகே ஜெயில்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம் (என்கிற) மஸ்தான். லோடுமேன். இவரது மனைவி சாரதா(வயது 50). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன். மூத்த மகளுக்கு திருமணமாகி கணவருடன் தனியே வசித்து வருகிறார். இன்னொரு மகளும், மகனும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதில் வீட்டில் கணவன், மனைவி மட்டும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த சாரதா திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். மனைவியின் அலறல்

சத்தம் கேட்டு சண்முகம் தீயை அணைக்க முயற்சித்தார். அப்போது அவருக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர். இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சாரதா 100 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்ப தகராறு காரணமாக சாரதா தீக்குளித்தாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.