“நிதானமற்றநிலையில் மதுபோதை” சுங்கத்துறை அதிகாரி காரால் விபத்து!

0 357
Stalin trichy visit

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சுங்கத்துறை அதிகாரி ஒருவரை அவருடைய கார் டிரைவர் அழைத்து சென்று வீட்டில் இறக்கி விட்டார். பின்னர் டிரைவர் மீண்டும் காரை ஓட்டி கொண்டு

எடமலைப்பட்டிபுதூரில் இருந்து ஜங்ஷன் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து காரை தாறுமாறாக ஓட்டி சென்றார். எடமலைப்பட்டிபுதூர் அருகே ஒருவர் மீது கார் மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது. பின்னர் அந்த வழியாக சென்ற மற்றொரு

கார் மீதும் மோதியது. இதனால் ஆத்திரத்துடன் பொதுமக்கள் காரை விரட்டி வந்தனர். கிராப்பட்டி அருகே காரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அங்கு சென்று சுங்க அதிகாரியின் காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் நிதானமின்றி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.