புகையிலை, குட்கா விற்றவர் கைது

0 537
Stalin trichy visit

திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் மாலைக்கோட்டைப் பகுதியில் உள்ள நடு குஜிலி தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பீடா கடையில் புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை செய்தனர். அப்போது ரூ.92,250 மதிப்பிலான புகையிலை மற்றும் குட்கா பொருட்களையும், அதை விற்பனை செய்த பணம் ரூ.19 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சின்ன கம்மாளத்தெருவை சேர்ந்த அந்த கடையின் உரிமையாளர் அன்புதாசனையும்(58) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.