லால்குடியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

0 124
Stalin trichy visit

திருச்சி, பிப்.17  தஞ்சாவூர் மாவட்டம் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சார்ந்த மாணவர்கள், லால்குடியில் கிராம வேளாண் பணியாற்றல் அனுபவ (RAWE) பயிற்சியை பெற்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பிப்.17 அன்று லால்குடி அருகிலுள்ள அபிஷேகபுரம் பகுதியில் புற்றுநோய் விழிப்புணர்வு நடத்தினர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், தடுப்பு முறைகள், ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள், புகை மற்றும் மதுபானத்தின் தீமைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், காலந்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதின் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.