லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்
திருச்சி, பிப்.17 திருச்சி மாவட்டம் லால்குடி பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது புதிய நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடம் தேர்வு செய்து தராமல் தொடர்ந்து இழுக்கடித்தும் காலம் தாமதித்து வருவதால் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர் இந்நாள் வரை தமிழக அரசு இடம் ஒதுக்கிடு செய்து நீதிமன்ற கட்டிடப் பணி துவங்காமல் இருப்பதை கண்டித்து திருச்சி லால்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 70-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி போலீசார் வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
வழக்கறிஞர்களின் திடீர் முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.