கார்கள் நேருக்கு நேர் மோதல் : தந்தை, மகன் பலி
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கரட்டாம்பட்டியை சேர்ந்தவர் மணி கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மகன் உள்ளனர் இன்று காலை இவர் தனது உறவினர்களான எல்லம்மாள் சுகன்யா மணிகண்டன் விஷ்ணு தேவ் ஆகிருடன் காரில் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு பிறந்தநாள் விழாவிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர் புலிவலம் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி வந்த இனோவா கார் எதிர்பாராத நேருக்கு நேர் மோதியது விபத்தில் கொத்தனார் மணி குழந்தை விஷ்ணு தேவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மேலும் பலத்த காயமடைந்த ஏல்லம்மாள் சுகன்யா மணிகண்டன் ஆகியோர் துறையூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் எதிரே வந்த இனோவா கார் டிரைவர் சந்தானகிருஷ்ணன் என்பவரும் பலத்த காயத்துடன் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளச் சென்ற இருவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் விபத்து குறித்து புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்