ஆடு திருடிய இரண்டு பேர் கைது

0 539
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலத்தில் வீட்டில் கட்டி இருந்த ஆட்டை திருடிய இரண்டு பேரை கைது செய்தனர்.

லால்குடி அருகே திருமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் 68 வயதான செல்லப்பன்.இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் தனது வீட்டில் ஆடுகளை கட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார். நேற்று அதிகாலையில் ஆடுகளின் சத்தம் அதிகமாக கேட்டுள்ளது. அப்போது அவர் எழுந்து வந்து பார்த்தபோது இரண்டு பேர் ஒரு ஆட்டை திருடி கொண்டு மோட்டார் பைக்கில் தப்ப முயன்றனர். அப்போது அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்துள்ளனர். இது குறித்து லால்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த லால்குடி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட ஒரு ஆடு மற்றும் மோட்டார் பைக்கை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.