ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் தரைவிரிப்பு; 2000 பேருக்கு மூலிகை நீர்மோர்-கோவில் நிர்வாகம் ஏற்பாடு!
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும்.இந்த நிலையில் கோடை வெப்பம் அதிகரித்துவருவதையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமம்மின்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு

விரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில்லிருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு இன்று முதல் தங்கக் கொடிமரம் அருகிலும், துரை பிரகாரம் கட்டணம் மில்லா வரிசையிலும் சுமார் இரண்டாயிரம் பக்தர்களுக்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் கோடை காலம் முழுவதும் வழங்க கோவில்
நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதை இன்று 04.03.2022 கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார். அருகில் உதவி ஆணையர் கு.கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன், உதவி கண்காணிப்பாளர் பி.ஆர்.கிருஷ்ணா மற்றும் அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் உள்ளனர்.