தினமும் தூய்மைப்பணி; மக்கள் தேவைகளை அறிந்து செயல்படும் கவுன்சிலர் செந்தில்!
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் திருவள்ளுவர் நகர், வ.உ.சி.தெரு, கணபதி தெரு ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மக்களுக்கு தேவையான

அடிப்படை பணிகளை கழக நிர்வாகிகளுடன் மேற்கொண்டார். தினமும் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கவுன்சிலர் செந்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் தனது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.