வியாபாரியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு!

0 349
Stalin trichy visit

திருச்சி என்எஸ்பி ரோட்டில் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் சைக்கிளில் பழம், துண்டு, தலையணை உறை, கர்சீப், ஜட்டி, பனியன் விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்ளனர். இதில் தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த முகமதுகாசீம்(வயது 49) என்பவர் என்எஸ்பி சாலையில் தரைக்கடையில் தலையணை மற்றும் ஜட்டி பனியன் விற்று வருகிறார். இவரிடம் தலையணை உறை வாங்க

வருவோரை, அப்பகுதியிலே சாலையோரம் நின்று கர்சீப் விற்கும் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த சலீம், ஹமீது, மேல சிந்தாமணி மாலிக் ஆகியோர் தடுத்து வியாபாரம் செய்ததால் இவர்களுக்கும், முகமதுகாசீமிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது முகமதுகாசீமை மற்ற 3 பேரும் சேர்ந்து தாக்கினர். இதில் காயமடைந்த முகமதுகாசீம் இதுகுறித்து கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சலீம் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.