மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாடுகள் கோசலையில் ஒப்படைப்பு

0 14
Stalin trichy visit

திருச்சி, ஆக.26  திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் பகுதியில் மாட்டு வண்டியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் நேற்று முன் தினம் அந்த பகுதியில் ரோந்து சென்றபோது, 4 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தவர்கள், போலீசார்க் கண் டதும் மணல் வண்டியை மாடுகளுடன் விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து அந்த வண்டிகளை போலீ சார் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்த னர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வண்டியில் பூட் டப்பட்டிருந்த மாடுகளை பெறுவதற்கு மாட்டின் உரிமையாளர்கள் யாரும் வராத நிலையில், நான்கு வண்டிகளில் பூட் டப்பட்டிருந்த 8 மாடுகளை ஸ்ரீரங்கதில் உள்ள கோசலையில் திருவெறும்பூர் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.