மணப்பாறை ராஜா வீட்டில் சி.பி.ஐ மீண்டும் சோதனை

0 609
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பூமாலைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா  (44). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் வேலை பார்த்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீட்டிற்கு 6 பேர் கொண்ட சிபிஐ போலீசார் மணப்பாறை போலீசார் உதவியுடன் ராஜாவின் வீட்டில் இன்று காலை முதல் திடீர் விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையை பொறுத்த வரை ராஜா என்பவர் 18 வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச விடியோவை வெளிநாடுகளுக்கு அனுப்பியதன் அடிப்படையில் எழுந்த புகாரின் பேரில் தான் இந்த விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் ஆபாச படங்கள் எங்கிருந்த வந்தது, அவர் எதற்காக அனுப்பினார் என்பது குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.