“திருச்சி மெயில் செய்தி எதிரொலி” சூடுபிடிக்கும் சென்டர் மீடியன் பணி!
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நீதிமன்றம் செல்லும் சாலை வரை சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் இந்தப் பணி தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து நமது திருச்சி மெயில் இணையதள பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை

அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். இதனால் செய்தி வெளியிட்ட திருச்சி மெயில் இணையதள பக்கத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.