“தரம் உயர்த்திய குங்குமம் தயாரிப்பு” அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!

0 311
Stalin trichy visit

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு கோயில்களிலும் தரம் உயர்த்தப்பட்ட குங்குமம், திருநீறு தயாரித்து வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. அதன்படி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரம் உயர்த்தப்பட்ட குங்குமம் தயாரிப்பதை சென்னையில் அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி

மூலம் தொடங்கி வைத்தார். அப்போது சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கோயில் இணை ஆணையர் மற்றும் கோயில் அலுவல பணியாளர்கள் கலந்து கொண்டனர். சமயபுரம் கோயில் இணை ஆணையர் கோயில் பணியாளர்களுக்கு குங்குமத்தை வழங்கினார். இந்நிகழ்வில் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.