முசிறியில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்க்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் மாலா ராமச்சந்திரன்,
ஒன்றிய ஆணையர்கள் சந்திரசேகர், ராஜ்மோகன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன்
சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான
பெட்ரோல் ஸ்கூட்டர், சிறப்பு சக்கர நாற்காலி ,திருமண நிதி உதவி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், காதொலி கருவி, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, ஊன்றுகோல், கண்ணாடி, கைக்கடிகாரம்,
சிறப்பு சக்கர நாற்காலி ஆகியவற்றை 54 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.
விழாவில் திமுக நிர்வாகிகள் ராமச்சந்திரன், திருஞானம், சிவகுமார்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன்,
இயன்முறை சிகிச்சையாளர் ரமேஷ்,செயல்திறன் உதவியாளர் செல்லப்பாண்டியன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்களும்,
கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.