தா.பேட்டை அருகே வேன் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு பலி
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (59). இவர் தா.பேட்டை அருகே உள்ள ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். ஏட்டு தங்கவேல் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். நேற்று துறையூரிலிருந்து மொபட்டில் தங்கவேல் தாப்பேட்டைக்கு வந்துள்ளார்.
நாமக்கல் – துறையூர் ரோட்டில் சக்கம்பட்டி அருகே வந்தபோது துறையூர் நோக்கி சென்ற பயணிகள் வேன் ஏட்டு தங்கவேல் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தா.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த தங்கவேல் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து வேன் டிரைவர் விஜயன்(45) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலியான சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.