2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி : திருச்சியில் நாஞ்சில் சம்பத் பேட்டி
திருச்சி, மார்ச் 12 2026 இல் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் உறுதி : திருச்சியில் நாஞ்சில் சம்பத் பேட்டி
காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் தற்போது அந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள் அதன் கூட்டணி கட்சியான திமுகவுக்கும் வாக்களிக்க மாட்டார்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு தான் வாக்களிப்பார்கள்.
தனிப் பெரும்பான்மையோடு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் – நாஞ்சில் சம்பத் திருச்சியில் பேட்டி
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து* ஒருங்கிணைந்த தமிழக வெற்றிக் கழகம் சார்பாக *மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
இதில் தலைமை கழக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் டெல்டா மாவட்ட தேர்தல் குழு கண்காணிப்பாளர் கு.ப கிருஷ்ணன் (முன்னால் அமைச்சர்), கொள்கை பரப்புத் இணை செயலாளர் பேராசிரியர் சம்பத்குமார் முன்னிலை வகுத்து சிறப்புரையாற்றுனர்.
இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தமிழக வெற்றிக்கழக மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500 மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
பின்னர் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் திருச்சியில் பேட்டி
தமிழகத்தில் எந்த பிரச்சனைக்கும் தமிழக வெற்றி கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் குரல் கொடுப்பதில்லை என்று சிலர் அரசியல் அனாமதிகள் அவதூறு பரப்புகிறார்கள். இட்டுக்கட்டிய கற்பனையான குற்றச்சாட்டு வைக்கின்றனர் அதற்கு இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மூலம் பதில் சொல்லி இருக்கிறோம்.
ஸ்டாலின் கவர்ன்மென்ட் முழுவதுமாக பிரேக் டவுன் கவர்மெண்ட் அரசாங்கமே செயல் இழந்துவிட்டது.
தமிழகத்தில் ரவுடிகளை காவல்துறை கட்டுப்படுத்த தவறிவிட்டது.
ஸ்டாலின் நிர்வாகத்தை காக்க தவறிவிட்டார் அவருக்கு இப்போது மெகா கூட்டணி அமைத்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைக்கின்ற வரவேற்பு அவருக்கு தூக்கத்தை கலைத்து விட்டது.
தமிழக வெற்றி கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்தான் போட்டி என்பது இன்றைக்கு நடைமுறைக்கு வந்துவிட்டது.
கோடநாட்டில் ஐந்து கொலைகள் நடைபெற்றது அங்கு வைக்கப்பட்டிருந்த செல்வங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்கு ஸ்டாலின் தயங்குவது ஏன் மேலும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்த ஏன் தயங்குகிறார்.
அதிமுக திமுக கள்ள கூட்டணி வைத்துள்ளனர்.
புதிய சக்தி கால் ஒன்றிவிட்டது 2026 புற்று பெறுகிறது தமிழக வெற்றி கழகம்.
தமிழகத்தில் நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து திமுக கூட்டணி கட்சிகள் மௌனமாக இருக்கின்றனர்
மதிமுக 3 தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் நிற்க நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளது உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெறுபவர்கள் திமுகவில் இணைத்துக் கொள்வார்கள்…
தமிழக வெற்றி கழகம் கூட்டணி பேச்சு வார்த்தை குழு என்பதை அமைக்கவில்லை காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு களங்கம் உண்டு காங்கிரஸ் கட்சியினுடைய கூட்டணி பேச்சுவார்த்தை குழு கிரிஷ் ஜோடேக்கர் தமிழக வெற்றி கழகத்தோடு கூட்டணி வைக்க வேண்டும் என கருத்தை வெளிப்படுத்தினார் மாணிக்கம் தாகூர் வெளிப்படையாகவே தமிழக வெற்றி கழகத்தை ஆதரித்தார் அதையும் தாண்டி அந்த கட்சியை சேர்ந்த வேலுச்சாமி கண்டனம் கூட தெரிவித்தார் அவர்கள் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை காங்கிரஸ் கட்சி எங்களை விரும்புகிறார்கள் என்று அதன் மூலம் தெரிகிறது அதைத் தாண்டி நாங்கள் என் கூட்டணிக்கு ஏன் செல்லவில்லை என்றால் எங்கள சுயமரியாதை இலக்க விரும்பவில்லை அதைத் தாண்டி எங்களுடன் யாரும் வந்தால் நாங்கள் அவர்களை வரவேற்போம் வரவில்லை என்றால் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை மிகுந்த தன்னம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் தற்போது அந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள் அதன் கூட்டணி கட்சியான திமுகவுக்கும் வாக்களிக்க மாட்டார்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு தான் வாக்களிப்பார்கள்.
தனிப் பெரும்பான்மையோடு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என்றார்..
2026 இல் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் நடைபெறும் உறுதி…உறுதி… என தெரிவித்தார்