சாரண சாரணியர் இயக்க வைர விழா முன்னேற்பாடு : அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
திருச்சி, ஜன.20 திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜன.28 முதல் பிப்.3 ஆம் தேதி வரை பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணிமிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கன் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளதால் மொத்தம் 2,422க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. மேலும் 2000 க்கும் மேற்பட்ட குளியல் அறைகள் மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், இந்த கூடாரத்தில் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற் னும் மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதையும், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்களின் உணவு முறைக்கு ஏற்றார் போல் உணவு தயாரித்து வழங்கிடும் வகையில் 72 சமையல் செய்யும் கூடங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட உணவு அருந்தும் கூடங்கள் அமைக்கப்பட்டு வருவதையும் இந்த விழா நடைபெறும் வளாகத்தின் அனைத்துப் பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் 350க்கும் மேற் பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு வருவதையும், சாரண சாரணியர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிடும் வகையில் உணவுப்பொருட்கள் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசி யப் பொருட்கள் விற்பனை செய்யும் வகையில் 50 க்கும் மேற்பட்ட கடைகளுடன் கூடிய மார்க்கெட் பகுதி அமைக்கப்பட்டு வருவதையும், அனைத்துப் பகுதிகளுக்கும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கிடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் தேவைக்கேற்றார் போல் பயன்படுத்திடும் வகையில் ஜெனரேட்டர் வசதி அமைக்கப்பட்டுள்ளதையும் மேலும் 25 படுக்கை வசதிகளுடன் கூடிய 2 மருத்துவமனைகள் மற்றும் 15 நடமாடும் மருத்துவ வாகனங்கள், அவசர உதவிக்காக 15 ஆம்புலன்ஸ் வாகனங்களும் விழா நடைபெறும் வளாகத்தில் அமைப்பதற்கான பணிகளையும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் சார்பில் தேவையான இடங்களில் தீயணைப்பு வாகனங்களையும், தீயணைப்பு கருவிகளும் வைக்கப்படவுள்ள இடங்களையும் நேற்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். அப்போது அமைச்சர் கூறுகையில், இந்நிகழ்விற்கு ஒன்றிய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள்,துணை, முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது அவர்களை வரவேற்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். மாணவ மாணவியர் தனித்தனியாக தங்குவதற்கு அவர்களுக்குரிய கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான உணவு தண்ணீர கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மிகச் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்வில், மாநில முதன்மை பேராணையர் பாரத சாரண சாரரணியர் இயக்கம் பெருந்திரளணி பொறுப்பாளர் அறிவொளி, மாநில கல்வி இயக்குநர் பழனிச்சாமி, சாரணர் இயக்க தேசிய ஆலோசகர் ராஜ்குமார் கௌசிக், மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் உட னிருந்தனர்.