முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு
திருச்சி, மார்ச் 23 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பொது கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், கலைஞர் நகர் பகுதி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கே.கே நகர் பேருந்து நிறுத்தம் அருகில் தி.மு.க. பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பகுதி செயலாளரும், திருச்சி கலைஞர் நகர் பகுதி கழகச் செயலாளர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
பொய்யாமொழி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முத்துராமலிங்கம், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர், திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், மாநில அணி நிர்வாகி செந்தில் மாவட்ட பொருளாளர் குணசேகரன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாவட்ட துனைச் செயலாளர் செங்குட்டுவன் லீலாவேலு மூக்கன், பகுதி கழகச் செயலாளர்கள் தர்மராஜ், நீலமேகம், மோகன், டி.பி.எஸ்.எஸ். ராஜுமுகமத், மணிவேல், ஆர்.சி.பாபு, சிவா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பொற்கொடி ஆகியோர் நன்றி கூறினார்கள்